மருது பாண்டியர்களின் வீர வரலாறு - Page 15

Maruthu Pandiyar Kalayarkoil Temple சம்பிரதாயங்களுடன் சோழபுரம் கோயிலுக்கு வந்தார். அவருக்குப் பாதுகாப்பாக 6வது ரெஜினமெண்டில் 2வது பட்டானியனும் உடன் வந்தது. மற்றபடி மதச் சம்பிரதாயங்களை நடத்திக் கொள்ள அவருக்கு நண்பகல் வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. கர்னல் அக்னியூவும் அவரது அலுவலர்களும் சம்பிரதாய உடைகளை அணிந்து கொண்டு குதிரைப்படை சூடி கர்னல் இன்னஸ் சின் முகாமிற்கு வந்தனர். கர்னல் இன்னஸ் இந்த அணிவகுப்பில் சேர்ந்துகொண்டு கோயிலை நோக்கி நடந்தனர். கோவிலின் முன்பாக இந்த உடைத்தேவரின் கூடாரத்திற்கு முன் எங்களை வரவேற்பதற்காக ஒரு பந்தல் போடப்பட்டிருந்தது. கர்னல் அக்னியூ விலையுயர்ந்த மிக நேர்த்தியான ஆடையை அவருக்கு வழங்கினார். பிறகு குதிரை அணிவகுப்பு வந்தது. பின் ஹௌதா, யானை, மிலிடரி வாத்தியக்குழு ஆகியவை வந்ததும், அந்தப் பெரிய மனிதர்கள் வந்தனர். அப்போது மிலிடரி வாத்தியங்கள், நாட்டு வாத்தியங்கள், போர் கொம்புகள் டாம் டாம் ஆகியவை இணைந்து ஆர்ப்பாட்டமான இசையை எழுப்பினர். பந்தல் முன் வந்ததும் கர்னல் அக்னியூ வலதுபுறமும் கர்னல் இன்னஸ் இடது புறமுமாக ராஜாவை அழைத்து வந்து அங்கிருந்த ஒரு கம்பளத்தின் நடுவே ராஜாவையும், ராஜாவின் சகோதரரை (மூத்த சகோதரர் ஒய்யத்தேவர்) அவரது இடப்புறமாக அமர வைத்தனர். எங்களது நாற்காலிகளை ஒரு அரைவட்ட வடிவில் போட்டுவிட்டு அவர்களுக்கு எதிரே அமர்ந்தோம்.

சிறிது மௌனத்திற்குப் பின் ஒருவர் எழுந்து அரசாங்கத்தின் பிரகடனத்தைப் படித்தார் உடையத்தேவர் என்ற கௌரி வல்லபதேவர், சிவகங்கையின் முதல் இஸ்திமிரார் (ஜமீன்தாராவர்) என்பதுவே அபபிரகடனமாகும். இந்தப் பத்திரத்தை கர்னல் இன்னஸ்-ஸிடம் கொடுக்கப்பட்டதும் அவர் அதைபடித்து தகுந்த முறையில் பாராட்டிப் பேசிவிட்டு புதிய ஜமீன்தார் தனது நன்றியை சிறப்பாகவும் உணர்ச்சி மிகுதியுடனும் கூறினார். மரியாதை நிமித்தமாக பதினோறு பீரங்கிகள் முழங்கின. அந்த இரண்டு கர்னல்களும், இளவரசை யானையின் ஷௌதாவில் ஏற்றி அமர்த்தினர். (ஷௌதா என்பது யானையில் மேல் பொருத்தப்பட்ட இருக்கை இதில் மன்னரோ, சிறப்பு வாய்ந்த குடிமகனோ அமருவர்.) ராஜாங்கத்தைப் பொருத்தமட்டில் அது மன்னர்கட்கு உரித்தானதாகும். நன்றி உணர்வால் இளவரசர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தார். அந்தக் காட்சியானது மிகவும் கவர்ச்சிகரமாக அமைந்திருந்தது என அதை எந்த நாளில் ஏற்பட்ட நிகழ்ச்சியை தத்துவமாக நமக்கு அவர் கைப்பட எழுதியதில் இருந்து உணர முடிகிறது.

கர்னல் அக்னியூவால் ஆடம்பரமாக உடையத்தேவர் என்ற கௌரி வல்லப தேவரை புதிய ராஜாவாக அறிவித்தார். இதுவரை சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த விடுதலை படைகளிடம் இருந்த ஒற்றுமை உணர்வை சாதியின் பெயராலும், பிரித்தாளும் சூழ்ச்சியாலும் குலைந்தது. புதிய ராஜாவும் சிகவங்கைச் சீமைக்குள்ளே புரட்சி செய்த மருதுபாண்டியர்களின் பலத்தைப் பெருமளவிற்குக் குறைத்தார்.
17-8-1801இல் வெ ள்ளையர்களின் படை பிரான் மலையைப் பிடிக்கப் பல வகைளில் போராடியது. மருது பாண்டியர்களின் வீரர்கள் வேல், வில், வாள், துப்பாக்கிக் குண்டுகள், சிறிய ரக ராக்கெட்டுகள் பயன்படுத்தினார்கள். இருப்பின் இறுதியில் வழக்கம் போல் பாங்கியரின் கோரப் பசிக்கு பிரான்மலையும் வீழ்ந்தது. இன்றளவுகூட மருதுபாண்டியர் பயன்படுத்திய ஒரு பீரங்கி அங்குள்ளது. மருதுபாண்டியர் அவர்களின் ஆயுதச் சாலையை அங்குதான் மிகவும் சிறப்பாக செய்தார்களாம். பிரான்மலை போக உடனே அவர்களின் முழு பலமும் போய்விட்டதாக ஒரு உணர்வு.

காளையர் கோயில் வீழ்ச்சி

கடைசியாக காளையார் கொயில் பல மேஜர் ஷெப்பர்ட்டின் தலைமையில் தாக்கப்பட்டது. கர்னல் ஸ்பிரேவூக்கூர் சிறுவயல் வழியாக ஆங்கிலேயர் அமைத்துக் கைவிட்ட காட்டுப் பாதையில் ஒரு படை இரகசியப் பாதையும் முத்தூரில் கண்டறியப்பட்டது. காளையார் கோயில் நோக்கி வந்தது.
கர்னல் இன்னஸ் தனது படைப்பிரிவுடன் செல்லும் போது ...

Maruthu Pandiyar Kalayarkoil Temple எதிர்ப்பட்ட எதிரிகளை தகர்த்துக் கொண்டே முத்தூர் முகாமிற்கு ஒரு மைல் தூரத்திலுந்து கொல்லப்பேரை கைப்பற்றிவிட்டு காளையார் கோயில் இடதுபுறமாக மேல்நோக்கி முகாமிட்டார். கர்னல் அக்னியூவின் படைகள் சோழபுரம் - கீரனூர் வழியாக காளையார் கோயிலைத் தாக்கின. அத்தோடு புதுக்கோட்டை துறைமுகத்தில் இருந்து பயணம் தொடங்கியது. அரசர் விஜயரகுநாதராயத் தொண்டைமானின் படையும், எட்டையபுரத்து பாளையக்காரரின் படை, உள்நாட்டில் கௌரி வல்லபரின் படை அத்தோடு சாதியின் பெயரால் பிரித்தாளும் செய்கைள் உள்நாட்டில் எதிர்ப்பு இத்தனை வழிகளில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையிலும் மருதுபாண்டியர்களின் மேல் விசுவாசமாக இருந்தவர்கள் வீரமாக எதிர்த்தும் பேராடினார்கள். மருது பாண்டியர்கள் நடத்திய போரைக் கண்டு பீரங்கியத் தளபதிகள் வியந்து போனார்கள்.

சிவகங்கையின் பிரதானியாகவும், தளபதியாகவும் இருந்த மருதுபாண்டியர்கள் தமிழக அரசியலில் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியார் தலையிடுவதால் பிற்காலத்தில் பெரும் அபாயம் ஏற்படும் என்பதனை உணர்ந்தனர். தென் மாவட்டங்களில் இருந்த பாளையக்காரர்களை ஒன்று சேர்த்து கட்டபொம்முவுக்குப் பின் அவர் அமைத்த வீரசங்கம் என்ற ஒரு அமைப்பை மீண்டும் உருவாக்கி ஆயுதங்களைச் சேமித்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். 12-1-1801 பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து 'வீரசங்க உறுப்பினர்களை சின்ன மருது மீட்டு அவர்களை சிவகங்கையில் மறைமுகமாக குடியமர்த்தினார். தென்னிந்திய விடுதலைப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது திருச்சி தலைவாசலிலும், ஸ்ரீரங்கத்தின் கோவில் மதிற்சுவர்களிலும் ஆங்கிலக் கம்பெனியாருக்கு எதிராக அவர் விடுத்த ஜம்பு தீவுப் பிரகடணம், அனைத்து இந்தியர்களும் ஒன்று சேர்ந்தாலே ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலை இயக்கம் வெற்றிபெறும் எனக் கருதிய மருது பாண்டியரின் பணி தெற்கில் நான்குனேரி முதல் வடக்கில் சோலாப்பூர் வரை பரவியது.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகத்தை எதிர்த்து அவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்ற நோக்குடன் அனைத்து இந்தியர்களையும் வேண்டி இந்தியாவில் முதன் முதலில் வெளியிடப்பட்ட அறிக்கை இதுவே. வெளியிட்ட நாள் - 16-6-1801 (ஜம்புதீவப் பிரகடனம்) சிப்பாய்க் கலகம் எழுவதற்கு அரை நூற்றாண்டுகளுக்கு முன்னேயே மருதுபாண்டியர் இந்த அரிய பணியைக் செய்தனர் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். (தற்பொழுது அவரை ஒரு ஜாதியின் தலைவராகப் பார்க்கக் கூடாது) இச்செய்தியைச் சொன்னவர் மறைந்த தமிழ்கடவுள் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

1-10-1801இல் மும்முனைத் தாக்குதலில் காளையார் கோயில் விழுந்தது. கர்னல் ஸ்டிரே காளையார் கோயிலைக் கைப்பற்றினார். பல ஆயுதங்கள் சிக்கின. ஆனால் மருதுபாண்டியர் இருவரும் அவர் கையில் கிடைக்கவில்லை.
மருது பாண்டியர்களுக்கு வேண்டியவர்கள் உற்றார் உறவினர்கள் தேடித்தேடிக் கொலை செய்யப்பட்டனர். காடுகளில் மறைந்து வாழ்ந்த மருது பாண்டியர்களை ஆங்கிலேயர்களின் படையும் கூலிப்படையும் தேடின.
மருது பாண்டியர்களைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ஏராளமான பொற்காசுகள் பரிசும், அரசாங்கத்தில் பல நல்ல பதவிகளும் என அறிவித்தார்கள் ஆங்கிலேயர்கள். இவரை மருது பாண்டியர்களுக்கு உயிருக்கு உயிராக இருந்த படைகள் அவரது உயிரை எடுக்க புறப்பட்டன. காளையார்மங்களம் கிராமத்தின் காடுகளில் மறைந்திருக்கின்றார்கள் மருதுபாண்டியர்கள் என்ற செய்தியை ஒரு ஒற்றன் மூலம் தெரிய பரங்கிப் படைகள் விரைந்தன. கடைசியில் ஆங்கிலேயர்களின் பெரும்படைக்கும் எஞ்சி இருந்த மருது படைக்கும் வாழ்வா, சாவா என்ற உணர்வோடு கூடிய போர் நடந்தது. பல நாட்கள் நல்ல தூக்கம், நல்ல உணவு இல்லாததால் காடு மேடு என்று ஓடியும் ஒளிந்தும் திரிந்ததால் மருது பாண்டியர்களின் உடல்கள் களைத்துப் போயின. தொடையில் குண்டடிப்பட்ட நிலையில் பெரிய

மருதுவை மேஜர் அகன்யூ கைது செய்தார். சிங்கம்புனரிக் காட்டில் படுகாயமுற்ற நிலையில் சின்னமருதுவை அவரிடம் முன்பு வேலைக்காரனாக இருந்த கரடிக் கறுத்தான் மூலம் பிடிபட்டார். நான்கு நாட்களுக்குப் பிறகு இருவரையும் 24-10-1801இல் மேஜர் அக்னியூவ் திருப்பத்தூர் கோட்டையில் தறபொழுது பேருந்து நிலையம் உள்ள இடத்தின் எதிரே உள்ள இடத்தில் முச்சந்தியில் இருவரையும் தூக்கிலிட்டனர். அவர்களுடன் வெ ள்ளைமருது மகன் கருத்தத்தம்பி, முல்லிக்குட்டித் தம்பி, சின்ன மருது மகன் செவத்தத்தம்பி, அவர் மகன் முத்துசாமி, இராமநாதபுரம் விடுதலை வீரர் மீனங்குடி முத்துக்கருப்பத்தேவர் ஆகியோர்.

துரோகமும் - தியாகமும்

சிவகங்கைச் சீமைக் கிளர்ச்சிகளில் நேரடியாக சம்பந்தப்பட்ட அனைத்துப் போராளிகளையும் ஆங்காங்கு தூக்கலிட்டுவிட்டனர். இன்னும் இந்தப் போராட்டங்களில் நேரடியாக சம்பந்தப்படாது. கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாளர்களாக இருந்தவர்கள் என சந்தேகப்படும்படியான எழுபத்து இரண்டு பேர்களை கைது செய்து விலங்கிட்டு தூத்துக்குடி முகாமிற்கு அனுப்பி வைத்தனர். அவர்களில், சிவகங்கைச் சீமையின் கடைசி மன்னரான சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் வேரும், சின்ன மருதுவின் பதினைந்தே வயதான இளைய மகனான துரைச்சாமியும் முக்கியமானவர்கள். பல வழிகளில் ஆங்கிலப் படை அணிகள், குறிப்பிட்ட திசைகளில் காளையர் கோயிலைத் தாக்குவதற்காக அணிவகுத்துச் சென்றன.

1. லெப்டினட் கர்னல் அக்னியூவின் படை வாணியங்குடி, முத்தூர் வழியாக மேற்காகவும் 30-9-1801 பின்னிரவு.
2. கர்னல் இன்னஸ்-வின் படை சோழபுரம், கீரனூர் வழியாக வடமேற்காகவும் 30-9-1801 பின்னிரவு கொல்லங்குடி.
3. ஸ்காட்ஜ் பிரிகேட் லெப்டினட் கர்னல் ஸ்பிரே தலைமையில் ஒக்கூர் வழியாக சிறுவயல் வழியாக ஆங்கிலேயர் அமைத்துக் கைவிட்ட காட்டுப் பகுதியான வடக்கு பகுதியிலும் 30-9-1801 மாலை சிறுவயல் சேர்தல்.
4. 4வது ரெஜிமென்ட் மேஜர் ஷெப்பேர்டு தலைமையில் காளையார் மங்களம் வழியாக வடகிழக்காக கர்னல் ஸ்பிரே படைக்கு உதவியாகவும்.
5. கர்னல் மெக்காலே தலைமையில் இராமநாதபுரம் படையுடன் மரவமங்களம் வழி தெற்குப் பகுதியிலும்.
6. காப்டன் பிளாக்பர்ன் தலைமையில் சாக்கோட்டை எலவன் கோட்டை வழியாக கிழக்குப் பகுதியில் இராமநாதபுரத்திலிருந்து வருகை தரும் கூலிப்படையுடன் 30-9-1801 அன்று ஆக ஆறு வழிகளிலும். எழுபத்து இரண்டு மக்கள் தலைவர்களையும் நாடு கடத்தி உத்திரவிட்டனர். வங்கக் கடலின் கீழ்க்கோடியில் தமிழகத்தில் இருந்து இரண்டாயிரம் மைல் தொலைவில் உள்ள பெங்கோலான் என்ற தீவில் பாதுகாப்புக் கைதிகளாக வைத்திருக்க முடிவு செய்தனர். இந்தத் தீவின் உண்மையான பெயர் பூலோ பினாங் என்பதாகும். 1786ல் அந்தத் தீவை, கெடா நாட்டு சுல்தானிடமிருந்து வெ ள்ளைப் பரங்கியர் ஆயிரம் ஸ்பானிய டார் தொகையில் 100 ஆண்டுக் குத்தகைக்குப் பெற்றனர். உடனே அத்தீவுக்கு பிரின்ஸ் ஆல் வேல்ஸ் தீவு என்ற புதிய பெயர் சூட்டினர். மலேயா நாட்டுக்கும் இடைப்பட்ட வங்கக்கடலை கடப்பதற்கு ஆறு வார காலம் கபபல் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அட்மிரல் நெல்சன் என்ற கப்பலில் 11-12-1802ம் தேதி தூத்துக்குடி கொண்டு போய் சேர்க்கப்பட்டன. இவர்கள் அனைவரும் எண்பது நாட்கள் கையில் விலங்கிடப்பட்ட்வர்களாக கப்பலுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்ததால் கப்பலைவிட்டு வெளியே காலடிவைத்து இறங்கி வருவதே அவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர்களது உடல்நிலை மோசமாகவும், தெம்பு இல்லாதவர்களாகவும் காணப்பட்டனர். அதனால் வரும் ...