வேலு நாச்சியாரின் வீர வரலாறு - Page 3

வீரத்திலகம் வேலுநாச்சியார் (1780-1789)

velu nachiyar temple located at sivagangai பின்னர் கௌரி வல்லபத் தேவர் காளையர்கோயில் ஆலயத்தில் பணியாற்றும் கருப்பாயி என்ற நடப் பெண் உதவி செய்து தப்பிக்க வைத்ததின் மூலம் காளையார் கோயிலிருந்து தப்பிச் சென்று, கரிசப்பட்டிப்பாளையக்காரர் வெ ள்ளை பொம்மை நாயக்கரிடம் தஞ்சமடைந்தார். பின்னர் மருது சகோதரர்களின்பலம் அறிந்து, அவர் கௌரி வல்லபத் தேவரைப் புதுக்கோட்டை மன்னரிடம் தஞ்சமடைந்த கௌரி வல்லபத் தேவரை மன்னர் அறந்தாங்கியில் மிகப் பாதுகாப்பாகத் தங்க வைத்திருந்தார்.
இளவரசி வெள்ளச்சி நாச்சியார் திருமணம் பற்றி மீண்டும் ராணி மருது சகோதரர்களிடம் ஆலோசனை செய்த போது தக்க மணமகன் ஒருவரை அவர்கள் தேடி வருவதாகவும், விரைவில் ராணிக்கு முடிவான தகவல் தருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ராணி மருது சகோதரர்களை மீறி எதுவும் செய்ய முடியவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு மருது சகோதரர்கள், இளவரசி வெ ள்ளச்சி நாச்சியாருக்கு சக்கந்தி வேங்கை பெரிய உடையணத் தேவர் என்பவரை திருமணம்செய்து வைக்கலாம் என்று கூறினர். சக்கந்தி வேங்கை பெரிய உடையணத் தேவர் சிவகங்கைக்கருகிலுள்ள சக்கந்தி நிலக்கிழாரில் ஒருவரான சக்கந்தித் தேவரின் மகனென்றும் செம்பிய நாட்டு கிளையைச் சேர்ந்த மறவர் என்பதால், திருமணம் செய்யலாம் என்றும் மருது சகோதரர்கள் ஆலோசனை கூறினர். ராணி வேங்கை பெரிய உடையணத் தேவருக்கு தனது மகள் வெ ள்ளச்சி நாச்சியாரைத் திருமணம் செய்து கொடுத்தார்.

queen velu nachiyar temple photos and images [இது சிவகங்கையில் உள்ள ராணி வேலு நாச்சியாரின் கோயில்]

இதனையறிந்த ஆற்காடு நவாப், தனது பிரதிநிதியைச் சிவகங்கைக்கு அனுப்பி வைத்தான். அப்பிரதிநிதி ராணி வேலுநாச்சியாரை சந்தித்துப் பேசினான். ராணியின்பாதுகாப்பைப் பலப்படுத்தவும், அவரது நிர்வாகத்திற்கு உதவுவதற்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும், ராணியும், நவாப்பும் ஓர் உடன்பாடுசெய்து கொண்டனர். அதனால் மருது சகோதரர்கள், ராணியின் பரிவாரங்களுடன் சண்டையிட்டனர். அதன் காரணமாக ராணி வேலுநாச்சியார் சிவகங்கைக் கோட்டை வாசலை மூடிவிட்டு மிகப் பாதுகாப்பாகக் கோட்டைக்குள் தங்கியிருந்தார். 10-02-1789ல் ராணியின் பாதுகாப்பு தொடர்பாக நவாப், சென்னை கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினார். உடனே கம்பெனியாரும், நவாப்பும் தங்கள் படைகளை சிவகங்கைகக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். 29-04-1789ம் தேதி தளபதி ஸ்டூவர்ட் தலைமையில் கம்பெனிப் படை, திருப்புத்தூர் கோட்டைக்கு வந்து சேர்ந்தது. 8-05-1799ம் தேதி புதுக்கோட்டைத் தொண்டமானின் மூவாயிரம் வீரர்களிடங்கிய படையும் சிவகங்கை வந்து சேர்ந்தது. பின்னர் இராமநாதபுரத்திலிருந்து தளபதி மார்ட்டின் தலைமையில் வந்த கம்பெனிப் படையும் அவர்களுடன் சேர்ந்து கொண்டது. தளபதி ஸ்டூவர்ட் ராணி வேலுநாச்சியாரைச் சந்தித்துப் பேசினார். ஆங்கிலத் தளபதி தனது படை வீரர்களுடன் 13-05-1799ல் கொல்லங்குடியைத் தாக்கினார். மருது சகோதரர்கள் அங்கு திரண்டிருந்த தனது ஆதரவாளர்களின் உதவியுடன் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி கம்பெனிப் படையை எதிர்த்துப் போரிட்டனர். கம்பெனிப் படையின் கடுமையான தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், மருது சகோதரர்கள் ராம மண்டலம் என்ற காட்டுப் பகுதிக்குப் பின் வாங்கினர். கொல்லங்குடிக்கோட்டை கம்பெனி தளபதி ஸ்டூவர்ட்டின் கைவசமானது. 19-05-1789ல் ராணி வேலுநாச்சியார், தளபதி ஸ்டூவர்டிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ஆங்கிலேயர்களும், ஆற்காடு நாவப்பும் சிவகங்கைச் சீமை பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதற்குத் தனக்கு உதவி செய்ய வேண்டுமென்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ராணி எழுதிய கடிதத்தை தளபதி ஸ்டூவர்;ட் 21-05-1789ல் சென்னை கவர்னருக்கு அனுப்பி வைத்தார். தளபதி ஸ்டூவர்ட் தலைமையில் கம்பெனிப் படைகள் முன்னேறிச்சென்று மருது சகோதரர்களது படைகளைத் துரத்தி அடித்தன. அடுத்த ஐந்து மாதங்கள் சிவகங்கைச் சீமையில் அமைதி நிலவியது. கம்பெனிப் படைகள் சிவகங்கைக் கோட்டையில் பாதுகாப்பிற்குக் காவல் இருந்தன. ஐந்து மாதங்களுக்குப் பிறகு மருது சகோதரர்கள் மைசூர் மன்னர் திப்பு சுல்தானின் உதவியைப் பெற்று, திண்டுக்கல் பகுதியிலிருந்து தனது படைகளைத் திரட்டிக் கொண்டு வந்து, திருப்புத்தூர் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டனர். மருது சகோதரர்களுடன் தான் போரைத் துவக்கினால், கி.பி. 1783ல் மைசூர் மன்னர் திப்புசுல்தானுடன், தான் செய்து கொண்ட உடன்படிக்கையை மீறிய செயலாகும் என நவாப் கருதினான். எனவே மருது சகோதரர்களுடன் ஓர் உடன்பாடு செய்து கொள்ளுமாறு நவாப்பை கம்பெனித் தலைமை கேட்டுக் கொண்டது. அந்த ஆலோசனையை நவாப்பும் ஏற்றுக் கொண்டான். சக்கந்தி வேங்கை பெரிய உடையத் தேவரின் மனைவி வெ ள்ளச்சி நாச்சியார், துரதிஷ்டவசமாக வேலுநாச்சியாருக்கு முன்னரே மரணமடைந்துவிட்டார். எனவே, சிவகங்கைச் சீமையில் சுமுகமான ஆட்சி மாற்றமும், நிர்வாகமும் ஏற்படும் வகையில்ஆற்காடு நாவபும், கம்பெனித் தலைமையும் சில ஆலோசனைகளை ராணிக்கு வழங்கினார்கள்.

queen velu nachiyar death date and info ராணி வேலுநாச்சியார் சிவகங்கைச் சீமையின் அரச பதவியிலிருந்து விலகுவதென்றும், அவருக்குப் பதிலாக சிவகங்கை மன்னராக வேங்கை பெரிய உடையணத் தேவர் பதவி ஏற்பதென்றும், மருது சகோதரர்கள் பிரதானியாகவும், தளபதியாகவும் பதவியேற்பதெனவும் ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. ராணி வேலுநாச்சியார் இந்த சமரசத் திட்டத்தை தனது அரச பதவியைப் பறிப்பதற்கான சதித் திட்டமெனக் கருதினார். எனினும், தனது மருமகன் வேங்கை பெரிய உடையணத் தேவர், தனக்குப் பதிலாகச் சிவகங்கைச் சீமையின் மன்னராகப் பதவியேற்கவிருப்பதால், வேலுநாச்சியார் இந்த சமரச உடன்பாட்டை வேலுநாச்சியார் இந்த சமரச உடன்பாட்டை ஏற்றுக்கொண்டார். மருது சகோதரர்களும் இந்த உடன்பாட்டை வரவேற்றனர். ராணி வேலு நாச்சியாரின் பத்தாண்டு கால ஆட்சி 1789ம் ஆண்டு டிசம்பரில் முடிவுற்றது. 1800ம் ஆண்டு வேலுநாச்சியார் இம்மண்ணுலகைவிட்டுமறைந்தார். வீரநங்கை வேலுநாச்சியாரை 'இந்தியாவின் ஜோன் ஆஃப் ஆர்க்” என அழைக்கலாம். 'வெ ள்ளையருக்கு எதிராக வாளெடுத்து வீரப்போர் புரிந்த 'முத்து வடுகநாதரின் மனைவி - வீரமங்கை வேலுநாச்சி - அன்று நடத்திய சிறப்பு வாய்ந்த வீரப்போர் வாயிலாக 'வேங்கடத்திற்கு வடக்கே ஒரு ஜான்சி ராணி தோன்றுவதற்கு இரு நூற்றாண்டுகட்கு முன்பே தமிழகம் தன் ஜான்சி ராணியைக் கண்டுவிட்டது” என்று வரலாற்று ஆசிரியர்கள் போற்றும்படி செய்துவிட்டாள் என்று வரலாற்றுப் பேராசிரியர் திரு. ந. சஞ்சீவி அவர்கள் 'மருதிருவர்” என்ற தனது நூலில் குறிப்பிடுகின்றார். மேலும் அதே ஆசிரியர் வீரமங்கை வேலுநாச்சியை 'தமிழகத்தின் ஜான்சி ராணி” என்று போற்றுவதைவிட ஜான்சி ராணியை 'வடநாட்டு வேலுநாச்சி” என்று புகழ்வதே சாலப் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது” என்று வேலு நாச்சியாரைப் பற்றி சிறப்பாகப் புகழ்ந்து கூறியுள்ளார். 25-12-1796ம் தேதி வெ ள்ளிக்கிழமை விடிகாலை வீரமங்கை இறந்து போனார் என வீரம் வளர்ந்த மண் பக்கம் 59ல் உள்ளது. இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.Data collected and published by Muthukumaran Swaminathan muthukumaran முற்றும்