இராமநாதபுரமும் சிவகங்கையும்
இப்போது இராமநாதபுரம் மாவட்டமாக உள்ள பகுதி மற்றும் சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்கள் அடங்கிய பகுதி பாண்டிய நாட்டின் கீழ்த்திசைப் பகுதியாக இருந்தது. இந்த நிலப்பரப்பு மறவர் நாடு என்றும் அழைக்கப்பட்டது. மறவர் நாடு பாண்டிய பேரரசின் ஆட்சிக்குள் அடங்கிய பகுதியாகவே எப்போதும் விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மறவர் நாட்டைச் சேர்ந்தவர்கள் அன்றும் சரி, இன்றும் சரி பாண்டியகள் என்றே சாதாரணமாக அழைக்கப்படுகின்றார்கள். சாதாரணப் பொது மக்களும் பெருமையோடு தாங்களுக்குப் 'பாண்டியர்” என்று பெயர் வைத்துக் கொள்கின்றார்கள். மறவர் நாடு பிற்காலத்தில் 'சேதுநாடு” என்றழைக்கப்பட்டது.
'சேது” என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு புராண காலச் செய்தி ஒன்று உள்ளது. 'சேதுநாடு” என்று அழைக்கப்படும் இன்றைய இராமநாதபுரம் இராமாவதாரத்தோடு பெரிதும் இணைத்துப் பேசப்படுகிறது. இராவணனின் நாடாக இருந்த இலங்கைத் தீவுச் சீதாதேவி சிறை அடைக்கப்பட்டிருப்பதை அனுமார் வழியாக தெரிந்து கொண்ட இராமபிரான் அங்கு செல்ல வேண்டிச் சுக்கீரவனின் வானரப் படைகளைக் கொண்டு பாலம் அமைத்தார். அந்தப் பாலத்திற்குத் திருவணை என்றும் 'சேது” என்றும் பொருள் உள்ளது. அந்தப் புனிதமான பாலத்திற்கு சேதுவிற்கு பொருத்தமான காவலர்களை நியமிக்க நினைத்தாராம் இராமபிரான். அச்சமயம் அந்த பகுதியில் வீரத்தோடு விளங்கிய மறவர்குலத் தலைவர் ஒருவரை நியமித்தார். அவருக்கு சேதுபதி என்று பெயராகி வந்ததாம். அப்படிப்பட்ட புனிதமான வழியில் வந்தவர்கள் சேதுபதிகள் என்று புராண கால வழி வந்த செய்திகள் கூறுகின்றன. இந்த சேதுபதி மரபினருக்கு 'திருவணை”க் காவலன் என்ற பெருமைக்குரிய பெயரும் உண்டு.
இராமபிரானுக்கு பாலம் கட்ட உதவி செய்து வானரர்கள் கட்டிய பாலத்திற்குக் காவல் உதவி சேது என்ற பாலத்தைக் காத்து, சேதுபதி திருவணைக் காவலன் என்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றது என்பது எல்லாம் புராண காலச் செய்திகள் என்று சொல்பவர்களும் உண்டு. மதுரையை ஆட்சி செய்த முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் வரலாற்று ஆவணங்கள் இராமநாதபுரம் சீமையை ஆண்ட அரசர்களை சேதுபதி என்றே அழைக்கின்றனர்.
சேதுபதி அவர்களால் தேசத்தில் ஆளப்பட்ட பூமி இராமநாதபுரம் சீமை, சிவகங்கை சீமை, புதுக்கோட்டை பகுதி தஞ்சாவூர் சில பகுதிகளைக் கொண்டதாக இருந்தது. அதற்கு மறவர் நாடு என்று பெயர்.
இந்த மறவர் நாட்டை ஆளும் பொறுப்பு எப்படி சடையக்கத் தேவர் என்றழைக்கப்படும் உடையன் சேதுபதிக்கு வந்தது?
மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு கிருஷ்ணப்ப நாயக்கர் சிறந்ததொரு வலிமையான ஆட்சியை நடத்தி வந்தார். அச்சமயம் மறவர் நாடு என்றழைக்கப்படும் இராமநாதபுரம் பகுதி முழுவதற்கும் அவர் அரசராக இருந்தார். மறவர் நாட்டில் காடுகள் நிறைந்திருந்தன. காடுகளென்றால் சாதாரணமான காடுகள் அல்ல. மிக அடர்ந்த காடுகளாக இருந்தன. காடுகளில் ...
Read Maruthupandiyar History in English...
Velu Nachiyar History in Tamil...
Sivagangai Palace photo gallery to view Read More ......
2008 - www.sivagangaiseemai.com
ALL Rights Reserved. Privacy Policy